ஆக்மெண்டெட் ரியாலிட்டி .... வருங்கால தொழில்நுட்பமா ?
ஆக்மெண்டெட் ரியாலிட்டி .... ஆங்கிலத்தில் ஆக்மென்ட் என்றால் "இருக்கும் பொருளில் ஏதாவது சேர்த்து அதன் மதிப்பினை கூட்டுவது"... ரியாலிட்டி என்றல் "உண்மையானது" என்று பொருள். அதாவது ஆக்மெண்டெட் ரியாலிட்டி என்றால் "உண்மையான பொருளில் செயற்கையான பொருளினை கலந்து உண்மையான பொருளின் மதிப்பினை கூட் டுவது ". மிக எளிதில் சொல்ல வேண்டும் என்றால் உண்மையான பொருளுக்கு மெய்நிகர் விவரங்களை சேர்ப்பது...
ஒரு மதிப்பீட்டின்படி, ஆக்மென்ட் ரியாலிட்டியின் சந்தை 2023 ஆம் ஆண்டில் 70 பில்லியன் டாலர் முதல் 75 பில்லியன் டாலர் வரை இருக்கும், அதே நேரத்தில் மெய்நிகர் ரியாலிட்டியின் சந்தை 2023 ஆம் ஆண்டில் 10 பில்லியன் டாலர் முதல் 15 பில்லியன் டாலர் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலே உள்ள படம் வழிகாட்டி அமைப்புகளின் எதிர்காலத்தை சித்தரிக்கிறது .... நீங்கள் , ஏதாவது கட்டிடத்தின் மீது உங்கள் புகைப்படக் கருவியை காட்டினால் , அந்த கட்டடத்தின் விவரங்களை நம்மால் காண முடியும். எடுத்துக்காட்டாக நாம் ஒரு வணிக வளாகத்தினுள் உள்ளோம் , ஒரு கடைக்கு வழி தெரியவில்லை எனில் நாம் இந்த தொழில்நுட்பத்தை வைத்து நம் அலைபேசியின் புகைப்படக் கருவியின் மூலம் நாம் வழியை கண்டறியலாம்...
மேலே உள்ள படம் ஒரு துணிக்கடையில் உள்ள பிரிவுகளை ஆக்மெண்டெட் ரியாலிட்டி மூலம் சித்தரிக்கப்படுகிறது. ஹார்லி டேவிட்சன் ஒரு ஆக்மெண்டெட் ரியாலிட்டி செயலியை உருவாக்கி வருகிறது, இதனை வாடிக்கையாளர்கள் கடையில் பயன்படுத்தலாம். ஆக்மெண்டெட் ரியாலிட்டி மூலம் அவர்கள் விரும்பும் வண்ணங்கள் மற்றும் அம்சங்களை மாற்றி பார்க்க இயலும்.
எதிர்காலத்தில் ஆக்மெண்டெட் ரியாலிட்டி புத்தகங்களில் பயன்படுத்தப்படும், அங்கு மாணவர்கள் தங்கள் புகைப்படக்கருவியை புத்தகத்தை நோக்கி சுட்டிக்காட்டினால், ஊடாடும் 3 டி படம் அல்லது வீடியோ திரையில் தெரியும் . இந்த தொழில்நுட்பத்தால் மாணவர்களுக்கு பாடங்களை எளிதில் புரிய வைக்க இயலும் .
எதிர்காலத்தில் வகுப்பறைகளில் ஆக்மென்ட் ரியாலிட்டி பயன்படுத்தப்படும், இதைவைத்து கற்பித்தல் எளிதானது. மாணவர்கள் ஸ்மார்ட் கண்ணாடிகள் மூலம் வரைகலைகளை பார்க்க இயலும்.
எதிர்காலத்தில் சுற்றுலா தளங்களில் ஆக்மெண்டெட் ரியாலிட்டி பயன்படுத்தப்படுவதால் சுற்றுலா செல்போருக்கு எளிமையாக இருக்கும். பழங்கால கட்டடங்களின் வரலாற்றினை நாம் எளிதாக அறிய முடியும்.
மேல் கூறப்பட்ட செய்திகள் மூலம் நாம் ஆக்மெண்டெட் ரியாலிட்டி வருங்காலத்தில் பெரிய தொழில்நுட்பமாகும் என்பதை அறியலாம்.
ஆக்மெண்டெட் ரியாலிட்டி பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவிடுக...
Comments
Post a Comment